என்பிஆருக்கு எதிராக வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி, கருப்பு பேட்ச் அணிய வேண்டும் -வி.எம்.எஸ்.முஸ்தபா

" alt="" aria-hidden="true" />


என்பிஆருக்கு  எதிராக  வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும், கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பை பதிவு செய்வோம்  என  தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தி உள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை குடியுரிமை திருத்தச் சட்டம், மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகிய சட்டங்கள் குறித்து சிறுபான்மை மக்கள், எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில் தமிழகத்தில் வண்ணாரப்பேட்டை, மண்ணடி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் போராட்டம் நடந்து வருகிறது. போராடும் பொதுமக்களுக்கு ஆதரவாக எதிர்கட்சிகள் உள்பட பல்வேறு அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.


இந்த சட்டங்களுக்கு எதிராக பல மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றினாலும் தமிழக அரசு இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கைக்கு அசைந்துக்கொடுக்கவில்லை.


கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலும் தீர்மானம் கொண்டுவர கோரிக்கை வைத்து  எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இம்முறையும் மானியக்கோரிக்கை மீதான் விவாதத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து விவாதம் நடத்தக்கோரியும் அரசு ஒப்புக்கொள்ளவில்லை.     இந்நிலையில் ஒரு மாதத்திற்கு மேலாக தமிழகத்தில் ஷாயின் பாக் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், கொரேனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் பல இடங்களில் நடைபெற்று வரும் ஷாயின் பாக் போராட்டங்களை திரும்ப பெற வேண்டுமென அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் விடுக்கபட்ட வேண்டுகோளை ஏற்று, தமிழகத்தில் ஷாயின் பாக் போராட்டங்கள் படிபடியாக தள்ளி வைக்கபட்டு வருகிறது. கொரேனா பாதிப்பில் இருந்து தப்பிக்க மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், என்பிஆருக்கு எதிராக ஆர்ப்பாட்டம், போராட்டம், பொது கூட்டம் நடத்த முடியாத நிலைக்கு நாம் தற்போது தள்ளபட்டுள்ளோம்.  இந்த கருப்பு சட்டங்களுக்கு எதிர்ப்பை நாம் தமிழக அரசக்கு உணர்த்தும் வகையில் வீடுகள் தோறும் கருப்பு கொடி ஏற்ற வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். அதே போன்று கருப்பு பேட்ஜ் அணிந்தும் கருப்பு சட்டத்திற்கு எதிர்ப்பை தெரிவிப்போம். ஆகவே தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் அவரவர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் தமிழக அரசுக்கு அழுத்தம் தர வேண்டுமென மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என கூறி உள்ளார்" alt="" aria-hidden="true" />


Popular posts
சர்ச்சில் புனிதநீரை வாயில் ஊற்றியதால்வேகமாக பரவிய கொரோனா - பாதிரியார்,மனைவி உட்பட 46 பேருக்கு நோய் பாதிப்பு
Image
தர்மபுரியில் அம்பேத்கரின் திருஉருவ படத்திற்கு ஆட்சியர் மலர்தூவி மரியாதை
Image
திருவண்ணாமலை மாவட்டம் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பாஜக கட்சியினர் 3000 பேர் மாபெரும் பேரணி
Image
அரசுபொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தால் பரிசுமழை தென்காசி எம்.எல்.ஏ மாணவர்களுக்கு இன்பஅதிர்ச்சி தந்தார்
சிதம்பரம் குமராட்சி பகுதியிலடாக்டர் அம்பேத்கார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் மரியாதை செலுத்தினார்
Image