மராட்டிய முதல்மந்திரியாக பதவியேற்ற உத்தவ் தாக்கரேவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து

மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றும் கருத்து வேறுபாடு காரணமாக ஆட்சி அமைக்க முடியாததால், அந்த மாநிலத்தில் கடந்த 12-ந்தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

 

அதன்பிறகு மராட்டிய அரசியல் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்தது.  இதையடுத்து, சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இன்று மராட்டிய முதல் மந்திரியாக பதவியேற்று கொண்டார்.  அவருக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.




 

இந்நிலையில் மராட்டிய முதல் மந்திரியாக பதவியேற்ற உத்தவ் தாக்கரேக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  மராட்டிய மாநிலத்தின் பிரகாசமான எதிர்காலத்திற்காக அவர் விடாமுயற்சியுடன் செயல்படுவார் என்றும் தனது டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்





Popular posts
சர்ச்சில் புனிதநீரை வாயில் ஊற்றியதால்வேகமாக பரவிய கொரோனா - பாதிரியார்,மனைவி உட்பட 46 பேருக்கு நோய் பாதிப்பு
Image
தர்மபுரியில் அம்பேத்கரின் திருஉருவ படத்திற்கு ஆட்சியர் மலர்தூவி மரியாதை
Image
திருவண்ணாமலை மாவட்டம் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பாஜக கட்சியினர் 3000 பேர் மாபெரும் பேரணி
Image
அரசுபொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தால் பரிசுமழை தென்காசி எம்.எல்.ஏ மாணவர்களுக்கு இன்பஅதிர்ச்சி தந்தார்
சிதம்பரம் குமராட்சி பகுதியிலடாக்டர் அம்பேத்கார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் மரியாதை செலுத்தினார்
Image