திருக்கழுக்குன்றத்தில் அ இஅ தி மு கழகத்தின் 48ஆம் ஆண்டு தொடக்க விழா.

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் அஇஅதிமு கழகத்தின் 48 ஆம் ஆண்டு துவக்க விழா  காஞ்சிபுரம் மத்திய மாவட்ட  செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது  திருக்கழுக்குன்றத்தில் உள்ள எம் ஜி ஆர் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர், அதனை தொடர்ந்து  இனிப்புகள் கொடுத்து பொது மக்களுக்கு  அண்ணதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் வேலாயுதம் மத்திய மாவட்ட துணை செயலாளர்கள் எஸ்வந்த்ராவ் மஞ்சுளா ரவிகுமார் மத்திய மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் வி பக்தவச்சலம் மத்திய மாவட்ட மருத்துவரணி துணை  செயலாளர் பிரவீன்குமார்  திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளர் விஜயரங்கன் மற்றும் அதிமுக பொறுப்பாளர் ஜி கே பாபு  நத்தம் ஏழுமலை திருக்கழுக்குன்றம் முன்னாள் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் தயாளன் மற்றும் தினேஷ்  மற்றும் நிர்வாகிகள்  பலர் உடனிருந்தனர்.